பெரும்பாலான வைணவக் கோவில்களில், “பெரிய திருவடி” என்றழைக்கப்படும் கருடாழ்வார், பெருமாளை நோக்கி கையை கூப்பிக்கொண்டு, நின்ற திருக்கோலத்தில் காட்சியளிப்பார். இத்தலத்தில், கருடாழ்வார், பெருமாளுக்கு நேர் எதிரே, ஒரு காலை மடித்தும், மற்றொரு காலை குத்துக்காலிட்டுக்கொண்டும், பெருமாளை தன் தோளில் ஏற்றிக் கொண்டு, அவரை நினைக்கும் பக்தர் இடம் நோக்கிச் செல்லத் தயாரான நிலையில் வீற்றிருக்கின்றார்.